

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என ஒரு தெளிவான முடிவை ஏற்கனவே தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, சசிகலாவை மீண்டும் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை.
சசிகலா ஜெயலலிதாவிடம், நானோ எங்கள் குடும்பத்தினரோ அரசியலுக்கு வர மாட்டோம் என கடிதம் கொடுத்தார். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். கட்சியை சிறப்பாக நடத்துங்கள் என கூறினால் ஜெயலலிதாவிற்கு உண்மையான சகோதரியாக சசிகலா இருப்பார் என அவர் கூறினார்.
