• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வானவெடிக்கை பட்டாசு-இன் தீப்பொறியால் தீவிபத்து.., துரிதமாக செயல்பட்டு தீயை அனைத்த தீயணைப்பு படையினர்…

ByKalamegam Viswanathan

Nov 12, 2023

மதுரை பைபாஸ் சாலை ராம் நகர் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் தகரசெட் அமைப்பின் மீது வானவெடிக்கை பட்டாசு -ன் தீப்பொறி விழுந்ததால் திடீரென அவற்றில் தீபிடித்து எரிய துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே உடனே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை டவுன் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துரிதமாக செயல்பட்டு தீயை போராடி அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித இடர்பாடுகளும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக குடியிருப்பு இருக்கும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.