• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஊதியம் வழங்கக் கோரி, ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்..!

Byவிஷா

Nov 10, 2023

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போடிநாயக்கனூர் நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசு மற்றும் நகராட்சி துறை உத்தரவின்படி மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் ஆனால் ஊதியம் வழங்கப்படாததால் போடிநாயக்கனூர் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம் செய்துள்ளார்கள்.
மேலும் தீபாவளி நாளை மறுநாள் என்பதால் அவர்கள் இந்த தீபாவளியை கொண்டாட முடியாத அவல நிலையில் உள்ளார்கள். இதைத் தமிழக முதல்வர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமும், போனசும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.