• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பால் வாக்கர் மகளுக்கு தந்தையான வின் டீசல்..!

Byமதி

Oct 24, 2021

பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். மிகசிறந்த நடிகர். பல்வேறு தரப்பு மக்களையும் தனது நடிப்பால் இழுத்தவர்.

கடந்த 2013 ம் ஆண்டில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தற்போது, அவருடைய மகளும் பிரபல மாடலுமான மீடோ வாக்கர் டொமினிகன் குடியரசில் நடிகர் லூயிஸ் ஆலனை மணந்தார். இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்தது.

இந்தத் திருமண நிகழ்வின் புகைப்படங்களை மீடோ வாக்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். இந்த புகைப்படத்தில் மீடோ வாக்கருக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து கரம்பிடித்துக் கொடுத்தது பால் வாக்கருடன் பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்த வின் டீசல். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.