• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்…

ByM.maniraj

Oct 10, 2023

கோவில்பட்டி. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பஞ்சாயத்து கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோவில்பட்டி இ. எஸ். ஐ மருத்துவமனை எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம், மாவட்ட செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் சதீஷ், தூத்துக்குடி மாநகராட்சி செயலாளர் எம். எஸ் வில்சன், மாவட்ட அவைத்தலைவர் ராஜகோபால், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், கோவில்பட்டி நகர துணை செயலாளர் வெங்கடேஷ், நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பட்டா விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.