• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!

Byவிஷா

Sep 27, 2023

தமிழகத்தில் இன்று முதல் காலாண்டு தேர்வு முடிவடையும் நிலையில், நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது. கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் எட்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.