• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய மாணவர் கடற்படை பிரிவு தொடக்க விழா..!

அகஸ்தீஸ்வரம் கல்லூரியில் என்.சி.சி. கடற்படை தொடக்க விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு தொடக்க விழா கல்லூரி கலை அரங்கில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் செ. ராஜசேகர் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் கே. எஸ். மணி குத்துவிளக்கு ஏற்றினார். கல்லூரி செயலாளர் சி. ராஜன் பொருளாளர் எஸ். ஆர். சுப்பிரமணியம் துணைத் தலைவர் சந்திரமோகன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதிமஹாலிங்கம், பி.வி ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுவாமிதோப்பு குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற் பிரிவு தொடங்கி வைத்து கல்லூரியில் என்.சி.சி. அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எம். ஜான் ரஸ்கின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் கே இளங்குமார் வணிகவியல் துறை தலைவர் ஆர் .தர்ம ரஜினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக பேராசிரியர் ஆ. சுரேஷ் வரவேற்று பேசினார். என்.சி.சி. கடற்படை அதிகாரி பேராசிரியர் முனைவர் பிரபு மாறச்சன் நன்றி கூறினார். பேராசிரியர் கவியரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.