

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி பேரறிஞர் அண்ணா சிலை அருகில் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் குமாரதாஸ் தலைமையில் குமரி பேரூர் திக அமைப்பாளர் யுவான்ஸ், மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சு குமாரதாஸ், தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். இதில் 18 வது வார்டு கவுன்சிலர் ஆட்லின்சேகர், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.அன்பழகன், மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் புஷ்பராஜ், ஒன்றிய பிரதிநிதி சகாயராஜ், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஷ்யாம், திமுக நிர்வாகிகள் பரிமளம், அறிவழகன், சிலுவை, வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

