• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மும்பை 60 மாடி கட்டிடத்தில் தீ விபத்து – 19-வது மாடியில் இருந்து குதித்தவர் பலி

Byமதி

Oct 22, 2021

மும்பையில் உள்ள கரே ரோட்டின் லோயர் பரேல் பகுதியில் அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில் இன்று மதியம் 12 மணி அளவில், 19வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட 19-வது மாடியில் ஜன்னல் வழியாக வெளியே வர முயன்ற ஒருவர் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மும்பை தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அந்த நபர் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.