• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மும்பையிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையேயான 4000 கிலோ மீட்டர் தூர மோட்டார் சைக்கிள் சாகச பயணம் மேற்கொண்டனர்…

மோட்டார் சைக்கிள் வீரர்கள் 6 பேர் மும்பையிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையேயான 4000 கிலோ மீட்டர் தூர மோட்டார் சைக்கிள் சாகச பயணம் மேற்கொண்டனர்.


மும்பையைச் சேர்ந்த சொனால் பாட்டில் தலைமையில் மோட்டார் சைக்கிள் வீரர்கள் 6 பேர் மும்பையிலிருந்து ராமேஸ்வரம் கன்னியாகுமரி இடையேயான 4 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை மோட்டார் சைக்கிளில் பயணம்செய்து சாதனை படைக்க முடிவு செய்து கடந்த 18 ஆம்தேதி மும்பையில் இருந்து மோட்டார் சைக்கிள் வீரர்கள் 6 பேர் 5 மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
வழி எங்கும் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களை பார்வையிட்ட பின்னர் நேற்று ராமேஸ்வரம் வந்தடைந்த அவர்கள் ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்த பின்னர் தனுஷ்கோடி சென்று திரும்பியபின்னர் கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றனர்.


தங்களுடைய பயணத் திட்டத்தில் பாதி தூரத்தை கடந்துவிட்ட நிலையில் புனித ஸ்தலங்கள் கோவில் நகரங்கள் முக்கியமாக ராமன் வழிபட்ட ராமேஸ்வரத்திற்கு வந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறோம் என்று கூறிய அவர்கள் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி சென்று நேற்று மும்பை செல்வது எங்கள் லட்சியக்கனவை நிறைவு செய்ததாக அமையும் என்று மகிழ்வுடன் தெரிவித்தனர்.