தூத்துக்குடி மாவட்ட முதன்மை வங்கி SBI நடத்திய, ஒரு மாபெரும் பரப்புரைப் பிரச்சார நிகழ்வை, இன்று தூத்துக்குடி AVM கமலவேல் மகாலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் துவக்கிவைத்து உரையாற்றினார்.
உடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடை – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.