• Thu. May 14th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம்..!

ByKalamegam Viswanathan

Aug 26, 2023

எல். கே. பி. நகர் நடுநிலைப்பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம் மதுரை கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர் கயல் விழி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார் . அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி சந்திராயன் 3 செயல்பாடும் விதம் அதன் பயன்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்கி கூறினார். வினாடி வினா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் அவர்கள் வாய்ப்பு என்னும் தலைப்பில் வாழ்த்தி பேசினார். அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகளை வட்டார கல்வி அலுவலர் அவர்கள் வழங்கினார். ஆசிரியை அனுசியா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராஜ வடிவேல் நன்றி கூறினார். விழாவில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் மனோன்மணி, அருவகம், சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா ஆகியோர் செய்திருந்தனர்.