• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீநகரில் தொடரும் துப்பாக்கி சூடு

Byமதி

Oct 22, 2021

காஷ்மீரின் ஸ்ரீநகரில் இராணுவ படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளால், அப்பாவி மக்களை படுகொலைகள் செய்வது அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதிகளால் நடத்தப்படும் இந்த தாக்குதல்களில் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இத்தகைய கொடூரமான பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்திய இராணுவமும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் சன்னபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.