• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…

Byமதி

Oct 21, 2021

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பேருந்து ஆட்களை ஏற்றிகொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது.

அதில் ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த 46 வயதான மகேஸ்வரி என்ற பெண் பயணம் செய்து கொண்டிருந்தார்.


மகேஸ்வரியின் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து இறங்குவதற்கு இருக்கையில் இருந்து எழுந்து நின்ற போது நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

உடனனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஸ்வரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரழந்தார்.

பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.