• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆடி அமாவாசை திருவிழாவில் நெகிழிகளை (பிளாஸ்டிக்) சேகரித்த இயற்கை ஆர்வலர்..,

ByKalamegam Viswanathan

Aug 18, 2023

சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோவிலில் 12:8:2023 முதல் 17:8:2023 வரை நடை திறந்து ஆடி அமாவாசை திருவிழா சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பூசை, அலங்காரத்துடன் காலை, மாலை என 6நாட்களும் 5 வேலை அபிசேகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.,
ஆடி மாதம் அமாவாசை நாளான 16:8:2023 புதன்கிழமை மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் குடும்பத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.,
அன்று மாலையில் மலை இறங்கும் போது, மதுரை யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் மு.ரா.பாரதி,
சதுரகிரி மலையில் பக்தர்கள் விட்டுச் சென்ற நெகிழி குப்பைகளை 30 கிலோ அளவுக்கு சேகரித்து, அடிவாரத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இயற்கை ஆர்வலர் மு.ரா.பாரதியின் இந்த சமூக சேவையை வனத்துறை அதிகாரிகளும், பக்தர்களும் பாராட்டினார்கள். முன்னதாக சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு நெகிழியை எப்படி பயன்படுத்துவது பற்றியும் இந்த புனிதமான மலையில் குப்பைகளை வீச வேண்டாம் என விழிப்புணர்வு செய்தார்.
மேலும், அவர் கூறும் போது தான் எப்போதெல்லாம் சதுரகிரி மலை பழனிமலை அழகர்கோவில் மலை மற்றும் சபரிமலை சென்று சாமி தரிசனம் முடித்து திரும்பும் போது நெகிழி மற்றும் இதர குப்பைகளையும் சேகரித்து, மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருவதாகக் கூறினார்.