• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் இணையவழி கலந்தாய்வு..!

Byவிஷா

Aug 14, 2023
துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 18 வரை இணையவழி கலந்தாய்வு நடைபெறுகிறது.
பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு ஆகஸ்ட் 14 அதாவது இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14000 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று இணையவழியில் தொடங்குகின்றது.
தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் ஆகஸ்ட் 14 காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 18 மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தி இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆகஸ்ட் 22 இட ஒதுக்கீடு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் விவரங்களுக்கு இணையதள முகவரியை அணுகலாம் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.