• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிற நோய்களில் இருந்து பாதுகாக்கும் கொரோன தடுப்பூசி – மகிழ்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு…

Byமதி

Oct 21, 2021

கொரோனா வைரசின் வீரியத்தைக் குறைக்க தற்போது உலக நாடுகள் அனைத்திலும், கோவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் போடப்படும் தடுப்பூசி என்னென்ன மாற்றங்களை உடலில் தருகிறது என, அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள், அதே போன்ற பிற வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கிறது என தெரிய வந்துள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி தற்போது கோவிட் -19 தொற்றை உருவாக்குகிற சார்ஸ்கோவ்-2 வைரசுடன் பிற வைரஸ்களையும் தடுக்கிறதாம். மேலும் சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற வைரஸ்களில் இருந்தும் இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறதாம்.

தற்போது, இந்த வைரஸ்களுக்கு எதிராக கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.