கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் இன்னுயிர் நீத்த காவல் படை வீரர்களுக்கு 60 குண்டுகள் முழங்க காவாத்து அஞ்சலி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள வீரர்களுக்கான நீர்த்தார் நினைவு தூண் முன்பாக இன்னுயிர் நீத்த காவல் படை வீரர்களுக்கு காவாத்து அஞ்சலி குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக நினைவு தூண் முன்பாக மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் படை வீரர்கள் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டு 60 குண்டுகள் முழங்க தங்களது அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். இதில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் மற்றும் ஆயுதப்படை காவல்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் வீரவணக்கம் செலுத்தினர்.