• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் மூர்த்தி பேசும்போது.., பிரியாணிக்காக ஓடிய திமுக தொண்டர்கள்..!

ByKalamegam Viswanathan

Aug 6, 2023

எங்களுக்கு பிரியாணி தான் முக்கியம் அமைச்சர் பேசும்போது பிரியாணிக்காக ஓடிய திமுக தொண்டர்கள். பேச்சு முக்கியமா? சாப்பாடு முக்கியமா ? பிரியாணிக்காக அமைச்சர் பி.மூர்த்தி பேசும் போதே கூட்டத்தை புறக்கணித்து பிரியாணி சாப்பிட ஒடிய திமுக தொண்டர்களால் ஆலோசனை கூட்டம் கலகலப்பாகவே நடந்து முடிந்தது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த திமுக பூத் ஏஜெண்ட் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என மேடையில் அமைச்சர் பி.மூர்த்தி பேச ஆரம்பித்தவுடனே,

பிரியாணி ரெடியாகியதால் அமைச்சர் மூர்த்தியின் பேச்சை கேட்காமல் கீழ்தளத்தில் பிரியாணிக்காக எழுந்து ஒடிய தொண்டர்களால் பரபரப்பானது.

இதில் உச்சகட்டமாக ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு பிரியாணிக்காக ஒடிய தொண்டர்கள், மட்டன் பிரியாணியை ஒரு பிடித்தவாறே, அமைச்சர் பேச்சு முக்கியமில்லை, பிரியாணி தான் முக்கியம் என்று அடித்து ஒடிய சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.