• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழக பெண் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு – குமரியின் “கை”ஒலியின் ஓசை இமயம் வரை எதிரொலிப்பு..,

தமிழகமே கொண்டாடும் பெருமை மிகுந்த பெண்ணின் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு கண்டு குமரியின் “கை”ஒலியின் ஓசை இமயம் வரை எதிரொலிப்பு.

குமரி மாவட்டத்தில் ஒரு சின்னம் சிறிய விவசாய கிராமம். ஊருக்கு நடுவே காணிக்கை மாதா தேவாலயம். அதன் மணி ஓசை கேட்டு காலை கண் மலர்ந்து, இரவு நேர தேவாலயம் மணி ஓசை கேட்டு கண்துயிலும் வடக்கு ராஜாவூரில் ஒவ்வொரு வீட்டு பிள்ளைகளையும் கல்வி கற்பிக்க, நாட்டம் கொண்ட பெற்றோர்கள் வடக்கு ராஜாவூரில் கல்வியில் பல்துறை கல்வியாளர்கள் உருவாகி வந்த ஊரில் லூர்துசாமி பிள்ளை, நேமத்து தேரெசம்மள் தம்பதியர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தைகள்.

ஆண்குழந்தைகளில் ஒருவர் விமானப்படையிலும், இரண்டாமவர் எல்லை பாதுகாப்பு படையிலும், மூன்றாமவர் ராணுவ பொறியியல் துறையிலும் பணியாற்றியதை கண்டு அந்த சின்னம் சிறு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வரும் விடுமுறைக்கு ஊர்வரும் போதெல்லாம், ஊர் மக்களால் ராணுவ வீரர்கள் பாராட்டுதலை பார்த்து வளர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா பெண்ணான என்னால் ராணுவத்தில் சேர முடியுமா? என கனவு காணத் தொடங்கினாள்.

ராணுவத்தில் அப்போது மருத்துவ பணியில் பெண்கள் பணியாற்றுவதை சகோதரர்கள் மூலம் தெரிந்து கொண்டவர். பள்ளி இறுதி வகுப்பிற்கு பின் ராணுவத்தின் மருத்துவத்துறை தாதியர் தேர்வில் வெற்றி பெற்று வெற்றி பெற்றவர். ராணுவத் துறையின் மருத்துவ பிரிவினரால் தாதியர் உயர் பிஎஸ்சி கல்விக்கு சேர்த்து உயர் கல்வியில் மூன்றாண்டுகள் கற்று தேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பை.1985 ல் தலைநகர் டெல்லியில் ராணுவத்தின் மருத்துவ பணியில் சேர்ந்தார்.அந்த நாள் அவரது கனவு நனவான நாள்.

தமிழகத்திலிருந்து இந்திய ராணுவம் மருத்துவ பிரிவில் 38 அண்டு நீண்ட மருத்துவ பணியின் சாதனையின் முதல் பெண் மேஞர் ஜெனரல். இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா பயணித்த ராஜபாட்டை ராணுவம் என்ற சொல்லோடு ஒட்டி பிறந்த குழந்தை ராணுவ ரகசியம் என்ற சொல்லும் இந்திய ராணுவ மருத்துவ பிரிவில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த முதல் பெண் மேஜர் ஜெனரலை பற்றிய தகவல்கள் கிடைத்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வலைத்தளத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி உள்ளம் மகிழ்ந்து வாழ்த்திய பதிவை சில நொடிகளில் ராணுவத்தின் தலைமையால் அகற்றப்பட்ட நிலையில், தமிழகம் எங்கும் எதிரொலிக்க பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்ப காட்சிகள் மாறியது.

தலைமை ராணுவ அலுவலகம் அறிவிக்கும் முன்பே வடக்கு ராணுவம் தலைமையகம் வெளியிட்ட தகவலை தெரிந்துதான். முதல்வர் அவரது வலைத்தளத்தில் தமிழகத்தின் முதல் பெண் மேயர் ஜெனரலுக்கு தெரிவித்த வாழ்த்தை அகற்றியதாகவும் அதே தகவலை ராணுவ தலைமை அறிவித்தபின் தமிழக முதல்வரின் பதிவை வலைத்தளத்தில் மீள் பதிவு செய்தாலும், ஒரு தமிழ் வீரப்பெண்ணின் வீர மிக்க உயர் தகுதி அறிவிப்புக்கு பின்னாலும் இத்தனை அரசியல் விளையாடுகிறதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.

எது எப்படி இருந்தாலும் குமரியின் மகள் (தமிழகத்தின் மங்கையான) இக்னேஷியஸ் டெலோஸ் ஃளோராவை நம் நாட்டு மங்கை என குமரி முதல் இமயம் வரை ஒற்றை குரலில் ஒலிக்கிறது.