

கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இந்த பகுதிக்கு தினம், தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தாலும், சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல் படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

கன்னியாகுமரி கடல் நடுவே இருக்கும் ஐயன் திருவள்ளுவர் சிலை பாறைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடைப்பட்ட கடல் பகுதியில் பிளாஸ்டிக் இழைகளால் ஆன பாலம் அமைக்க முதல்வர் ரூ.37 கோடியை அனுமதித்துள்ளார் என தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மாவட்டத்தில் இன்று முதல் (ஆகஸ்ட் 4_6) வரை மூன்று நாட்களுக்கு காற்றாடி திருவிழா நடக்க இருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து மட்டும் அல்ல. தைவான், மலேஷியா போன்ற வெளி நாட்டவர்களும். இந்த காற்றாடி திருவிழாவில் பங்கேற்றுள்ளனர் என தெரிவித்த அமைச்சர் தமிழ்வாழ்க என்ற காற்றாடியை பறக்க விட்டார். உடன் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மேயர் மகேஷ், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் மற்றும் ஏராளமான மாணவர்கள், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் நீலக்கடலின் மேல் நீல வானில் பல வண்ண பல வடிவ காற்றாடிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியின் இரண்டாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதை நமது முதல்வர் வரவேற்று அவரது வலைத்தளத்தில் பதிவு இட்டுள்ளார்.

சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். பாஜக ஆட்சிக்கு “கவுண்ட் டவுன்” தொடங்கி விட்டது. ஜெயபிரகாஷ் நாராயண் போன்றோர் போற்றி காத்த ஜனநாயக பாதையில் மீண்டும் நாம் பயணப்பட போகிறோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

