• Thu. Mar 27th, 2025

அதிமுகவின் மதுரை மாநாட்டிற்கு அழைப்பு..,

தக்காளி, காய்கறிகளை ரேசன் கடையில் விற்பதற்கு பதில் தெருதெருவாக தள்ளுவண்டியில் வைத்து விற்கலாம், இந்த அடிப்படை அறிவு முதலமைச்சருக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அ.தி.மு.க வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க அமைப்புச்செயலாளர் தளவாய்சுந்தரம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ, அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், பரமசிவம் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து, ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை எனவும், தக்காளி விலையை உயர விட்டிருக்க கூடாது எனவும் சொன்னார்.

தக்காளி, காய்கறி எல்லாம் ரேசன் கடையில் குடுக்கிறதுக்கு பதில் நடமாடும் தள்ளுவண்டியில் வைத்து தெரு தெருவாக விற்கலாம். அப்போது தான் மக்களுக்கு எளிதாக கிடைக்கும். இந்த அடிப்படை அறிவு கூட முதல்வருக்கு இல்லை.
அரசாங்கம் விற்கும் மதுபாட்டிலில் 10 ரூபாய் அதிகம் வாங்கலாம் என்று கண்டிபிடித்தது திமுக.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வது எல்லாம் சும்மா எனவும், தலையில் இருக்கும் வரை தான் முடி, கீழே விழுந்து விட்டால் மயிர் எங்கள் கட்சியில் இருந்து வெளியே போன ஓ.பி.எஸ்., தினகரன் போன்றவர்கள் மயிருக்கு சமம். அவர்கள் இருந்தவரை முடி போல் மலர் வைத்து அலங்காரம் செய்தோம் என்றும் கூறினார்.