• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவுக்கு, தேசிய லீக் கட்சி நன்றி :

ByKalamegam Viswanathan

Jul 12, 2023

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்களுக்கு அனைத்து விஷயங்களிலும் பாதிக்கக்கூடிய மத்திய அரசால் நிறைவேற்றப்பட இருக்கும் பொது சிவில் சட்டத்தை சிறுபான்மை மக்களுக்கு பாதிக்க கூடியது என்று பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .
சிறுபான்மை மக்களின் நலனுக்காக முடிவெடுத்த அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடிபழனிச்சாமி, அனைத்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மான நகலை ,அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்கே.டி. ராஜேந்திர பாலாஜியிடம், இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் வழங்கினார். அருகில் ,நிர்வாகிகள் முகம்மதுகாசிம் இப்ராகிம், மும்மதுஹான், முத்துவிலாசா, மாலிக்பாட்சா, காதர்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.