

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவர் அளித்த நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ததை வரவேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பிஉதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா, வாடிப்பட்டி யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன், பேரூராட்சி அவைத் தலைவர் முனியாண்டி, மற்றும் ராமலிங்கம் வார்டு கவுன்சிலர்கள் ரேஸ் ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, வசந்தி கணேசன், சரண்யா கண்ணன், டீக்கடை கணேசன் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு செயலாளர்கள் மணி மற்றும் மணிகண்டன் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தண்டபாணி குருவித்துறை பாபு முள்ளி பள்ளம் பாண்டியம்மாள் ராமநாதன் பேட்டை மாரி சுரேஷ் ராஜா மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழக வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
