• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jul 8, 2023

மரவள்ளிக்கிழங்கு வடை

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு – 1ஃ2 கிலோ,
வெள்ளை மா – 1ஃ4 கப்,
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைபிடி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 1ஃ2 கப்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மரவள்ளிக்கிழங்கை எடுத்து  மெல்லியதாக தோல் சீவியபின் கழுவி, கரட் துருவியில் துருவிக் கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எடுத்து சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு, வெள்ளை மா, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு தூவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, வடைபோல்  தட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடானதும், பிசைந்த வடைகளை கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு, நன்கு இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும், கரண்டியால் வெந்த வடைகளை எடுத்து சில நிமிடம் எண்ணெய்யை வடிய வைத்து எடுத்துசூடாக பரிமாறினால் ருசியான மரவள்ளிக்கிழங்கு வடைரெடி.