• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எலும்புப்புரை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இந்தியர்களுக்கு அதிகம் – டாக்டர்கள் எச்சரிக்கை…

Byகுமார்

Oct 19, 2021

கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைவாக உட்கொள்வதால் எலும்புப்புரை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இந்தியர்களுக்கு அதிகம் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலக எலும்புப்புரை நோய் தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் மருத்துவமனை நிபுணர்கள் டாக்டர் சத்தியநாராயணா, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை துறைத்தலைவர் , முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெற்றி நல்லதம்பி , மூட்டு மற்றும் விளையாட்டு மருத்துவ சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் பிரபு வைரவன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து டாக்டர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம்
இதுபற்றி கூறுகையில்,

கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைவாக உட்கொள்வதால் எலும்புப்புரை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இந்தியர்களுக்கு அதிகம் இருப்பதாகவும், இதனை தடுக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ள சமச்சீரான உணவை உட்கொள்வது அவசியம். மேலும், தவறாமல் உடற்பயிற்சி செய்வது, உடல் உழைப்பு, போதுமான அளவு சூரிய ஒளி உடலில் படுமாறு இருப்பது, புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது முக்கியம். நாள்பட்ட நோய்களான நீரிழிவு மற்றும் தைராய்டு கோளாறுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் எலும்புப்புரை நோய் வராமல் தடுக்க முடியும் என விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.