• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைது

ByKalamegam Viswanathan

Jun 7, 2023

திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC புக்குடன் விற்க முயன்ற இருவர் கைது.

மதுரையில் கடந்த ஜனவரி மாதம் பசுமலை பகுதியில் உள்ள ஒரு டூவீலர் விற்பனை நிலையத்தில் (Auto Consultancy) விலையுயர்ந்த பைக்கை இரண்டு பேர் கொண்ட கும்பல் விற்றுவிட்டு சென்றிருந்த நிலையில் அது திருட்டு வட்டி என பல்லடம் காவல்துறையினர் வந்து திருப்ப பெற்று சென்ற நிலையில் நேற்று மீண்டும் அந்த கும்பல் யமஹா R15 பைக்கை ஒரிஜினல் RC புக்குடன் விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுரை சிந்தாமணி அருகே வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் பசுமலை அருகே உள்ள ஆட்டோ கன்சல்டன்சி நடத்தி வருகிறார் இவரது கடையில் விலை உயர்ந்த டியூக்., ஆர்15., அப்பாச்சி., ஹார்லி டேவிட்சன்., பல்சர் உள்ளிட்ட அதிக திறன் கொண்ட பைக்குகள் விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் கடந்த ஜனவரி மாதத்தில் மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் டியூக் பைக்கை (TN 38 CV 5404) ஒரிஜினல் RC புக்குடன் விற்பதற்காக தனது நண்பருடன் மணிகண்டனின் கடைக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து., பைக் கன்சல்டன்சி ஓனர் மணிகண்டன் 1.15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பைக்கை பெற்றுள்ளார். அதனை அவர் விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்ய முடிவு செய்து YouTube., இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்., OLX ஆகியவற்றில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அந்த Duke (TN 38 CV 5404) பைக்கின் கோவையை சேர்ந்த உண்மையான உரிமையாளர் மணிகண்டனை அணுகி காவல் நிலையத்தில் தான் புகார் அளித்து வழக்கு பதிவு செய்த ஆதாரத்தை காண்பித்து போலீஸ் உதவியுடன் தனது பைக்கை பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்த மணிகண்டன் சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். மேலும் தனக்குத் தெரிந்த மற்ற டூவீலர் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆட்டோ கன்சர் சி வாட்ஸ் அப் குரூப்பில் ஏமாற்றி விட்டு சென்ற நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தார். அவரைப் போலவே பலரையும் அந்த கும்பல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை OLX-ல் யமஹா பைக் விற்பனைக்கு உள்ளது என்று ஒருவர் வெளியிட்டு இருப்பதை பார்த்த அந்த கும்பல் அந்த யமஹா ஆர்15 பைக் உரிமையாளரிடம் ஒரிஜினல் ஆர்சி புக்கை கைப்பற்றி வைக்க திருடி வந்து மதுரையில் யமஹா பைக் ஷோரூம் இல் விற்க முயன்றுள்ளது. இதனைத் தொடர்ந்து., பல பைக் கன்சல்டன்சி உரிமையாளர்களுக்கு இந்த கும்பல் பற்றி தெரிவிக்கப்பட்டு நேற்று கையும் களவுமாக பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து., வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் வயது 32 மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அங்காடிமங்கலத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் வயது 34 என்பதும் தெரியவந்தது. முருகேசன் திருப்பூர் பல்லடம் கோவை ஆகிய பகுதிகளில் உள்ள காட்டன் அலைகளில் வேலை பார்த்து வருகிறார்.

பைக் விற்பதற்காக OLX விளம்பரம் செய்யும் நபர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒரிஜினல் ஆர்சி புக்கை பெற்றுக் கொண்டு வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி அங்கிருந்து திருடி வந்து தமிழ்நாடு முழுவதும் பல டூவீலர் விற்பனை நிலையங்களில் விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் செல்வது தொடர்கதையாக இருந்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.