• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ByA.Tamilselvan

Jun 3, 2023

200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்பட அரசு சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதே போல ரெயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவிலும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.