• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்பு

ByA.Tamilselvan

May 31, 2023

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 5,389 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 500 மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, 50 மீட்டர்களுக்கு இடையே இருக்கக் கூடிய கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகள், கோயில்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. அதன் முடிவில் மூடல் நடவடிக்கைகள் தொடங்க இருக்கின்றன. இதன்படி விரைவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.