• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாபி.டி.செல்வகுமார் பரிசுகளை வழங்கினார்
கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரம் அமுதம் நகரில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் கல்வி துறையில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T.செல்வகுமார் அதிக மதிப்பெண் பெற்ற ஜிவி ஆஷிக், அஷின், அக்ஸயா, கீர்த்திகா ஆகியோருக்கும் கல்வி துறையில் சிறந்து விளங்கிய பேராசிரியர் குருசாமி, பேராசிரியை கலைமணி ஆகியோருக்கும் கலப்பை நற்சான்றிதழும், பரிசுத் தொகையும் வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் ஆனந்த், குமரி மாவட்ட செயலாளர் ராஜன், வர்த்தக அணி தலைவர் விஸ்வை சந்திரன், மகளிர் அணி தலைவி வரலட்சுமி, துணைத் தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய தலைவர் செந்தில் மோகன், தீபன் சக்ரவர்த்தி, சில்வெஸ்டர், பகவதி, பன்னீர் செல்வம், முத்து, மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.