தலைவலிக்கு மாற்று மருந்தாகும் ஊதா நிற எண்ணெய்:
மனிதர்களுக்கு பல நன்மை தரும் பொருளாக எண்ணெய் இருக்கின்றன. அதுபோல எண்ணெயில் பலவகைகள் இருக்கின்றது. தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை நமக்கும் தெரிந்த எண்ணெய்களாகும். ஆனால் அழகிய ஊதா நிறத்தில் பல்வேறு நன்மைகளை கொண்ட லாவெண்டர் எண்ணெய் பற்றி கேள்விப்பட்டதுண்டா ? ஆனால் லாவண்டர் எண்ணெய் பல உடல் பிரச்சினைகளுக்கு மருந்தாக அமைகிறது. தற்போது அனைவருக்கும் தலைவலி பிரச்சினை ஏற்படுகிறது.
அதற்கு காரணம் போதிய ஓய்வில்லாமல் வேலை செய்வது, தேவையில்லாமல் டென்ஷனாவது, வேலையில் அதிக பணி சுமை ஆகிய பல விஷயங்கள் காரணமாக உள்ளது. இதனால் தலைவலியை போக்க அடிக்கடி மாத்திரை போடும் தவறான பழக்கத்தை பலர் வைத்துள்ளனர். இப்படி அடிக்கடி மாத்திரை போடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படும். அதற்கு பதிலாக தலைவலி ஏற்படும் போது லாவண்டர் எண்ணெயில் ஒரு சொட்டு எடுத்து நெற்றியில் தேய்த்து கொண்டால், வலி விரைவில் நீங்கும்.







; ?>)
; ?>)
; ?>)