• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு பரவும் இதயதொற்றுநோய்..!

Byவிஷா

May 22, 2023

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு இதய தொற்று நோய் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்தில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு வேல்ஸ் மற்றும் மேற்கு இங்கிலாந்தில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதயத்தில் இருக்கும் வீக்கம், அலர்ஜியை ஏற்படுத்தும் ஒரு வகை நோய் பாதிப்பு கடந்த ஒரு வருடமாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த நோய் பதினைந்து குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 9 பேருக்கு எண்டோ வைரஸ் இருப்பது உறுதியானது. இந்த வைரஸ் சுவாச நோய் மற்றும் கை மற்றும் கால்கள் தொடர்பான நோய்கள், மூளை காய்ச்சலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.