• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக முப்பெரும் விழா!

Byஜெ.துரை

May 8, 2023

சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பத்மஸ்ரீ விருது பெற்ற பாலம் கல்யாணசுந்தரம் பாராட்டு விழா ,’ பத்திரிக்கையாளர் குரல்’ மாத இதழின் 11ஆம் ஆண்டு விழா, அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்க பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவருமான டி.எஸ்.ஆர் சுபாஷ் அவரது பிறந்தநாள் விழா, என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

இப்முப்பெரும் விழாவை சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு தலைமையில் நடைபெற்றது.முன்னாள் சுகாதர துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே முன்னிலை வகித்தார்.விழாவில் பத்திரிக்கையாளர் குரல் மாத இதழை பழ நெடுமாறன் வெளியிட அதை ஆர். நல்லகண்ணு பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நீதி அரசர் டி.என் வள்ளிநாயகம், கலைமாமணி லேனா தமிழ்வண்ணன்,திரைப்பட நடிகர் கே. பாக்யராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ரஜேஷ்வரி பிரியா, டாக்டர் ஆர். உமாபாரதி, மற்றும் பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பல பேர் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.