• Tue. Apr 30th, 2024

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்

Byp Kumar

May 2, 2023

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வையவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையான சித்திரை திருவிழா கடந்த 23 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சித்திர திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுனரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது .


முன்னதாக கோயில் வடக்கு ஆடி வீதி, மேற்கு ஆடி வீதி சந்திப்பில் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரமாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியதை தொடர்ந்து அருள்மிகு மீனாட்சியும் சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடையில் எழுந்கருளினர் . தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாத்தப் பட்டதை தொடர்ந்து, மிதுன லக்கனத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனையடுத்து விழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்களது திருமாங்கல் கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக கோவில் உள்ளேயும், சித்திரை வீதிகளிலும் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் ஏராளாமான இடங்களில் வைக்கப்பட்டு இருந்ததுடன் கோயில் மற்றும் சுற்று பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்பின்னர் பாரதிய ஜனதா கட்சியின்மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணிதலைவி மீனாஇசக்கிமுத்து ஏற்பாட்டில்மாநகர் மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரன்தலைமையில்500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாலி கயிறு மஞ்சள் குங்குமம் பூ அடங்கிய பிரசாதங்களை வழங்கினார்இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *