• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இளையராஜா அண்ணன் மகன் காலமானார்..!!

ByA.Tamilselvan

May 2, 2023

பாடகர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், நாடக எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாவலர் வரதராஜன். இவர் இளையராஜாவின் அண்ணன் ஆவார். இளையராஜாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973ல் மறைந்தார். பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவன். இவர் இளையராஜாவின் இசைக்குழுவில் பயணித்து வந்தார். இசைக்கலைஞரான இவர் ஓரிரு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். புதுச்சேரியில் வசித்து வந்த இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் காலமானார். இசையமைப்பாளர் அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்