• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை

ByKalamegam Viswanathan

May 1, 2023

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் செயல்பட்டு வரும் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சகாயராஜ் என்பவரின் மகன் ஆரோக்கிய வினித் வயது 26 இவர் மதுரை எல்லீஸ் நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று மதியம் வரை வேலை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார் நேற்று இரவு எப்போதும் போல் மாடியில் தூங்குவதற்காக சென்றுள்ளார்

இந்த நிலையில் காலை 9.30 மணி வரை வெளியே வராத காரணத்தினால் சந்தேகப்படந்த அண்ணன் கதவை தட்டியும் தொலைபேசி மூலமாக அழைத்தும் எந்தவித பதிலும் கிடைக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்த பொழுது மின்விசிறியில் தூக்கி தொங்கியபடி இருந்துள்ளார் இதை கண்டு அதிர்ந்து போன அவரது குடும்பத்தினர் மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு வருந்த எஸ்எஸ் காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாய் பேச முடியாத மாற்றத்தினால் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது