• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்..!

Byவிஷா

May 1, 2023

ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் இன்று தொடங்கி உள்ளது.
ராணிப்பேட்டை கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டத்தைச் சேர்ந்த 14, 16, 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான மூன்று வார கோடைக்கால பயிற்சி முகாம் ராணிப்பேட்டை பாரி கிளப் விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை ராணிப்பேட்டை கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து, இந்த மூன்று வார கால பயிற்சி முகாமை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர்கள் டி.கே.குமார், நாராயணசாமி, லட்சுமணன், நடராஜன், பயிற்சியாளர் ஜானகிராமன், இணை பயிற்சியாளர்கள் ஜெகன்பாபு, தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.