• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மயான பாதை ஆக்கிரமிப்பு- பிணத்தை வயல்வெளியில் சுமந்து செல்லும் அவல நிலை

ByKalamegam Viswanathan

Apr 23, 2023

மதுரை – உசிலம்பட்டி அருகே மயான பாதை ஆக்கிரமித்துள்ள பிணத்தை வயல்வெளியில் சுமந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் போடுவோர்பட்டி கிராமம் உட்கடை வெள்ளை காரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் , பெரிய கருப்பன் மகன் பால்சாமி இரண்டு தினங்களுக்கு முன் காலமானார்.

இவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் வயல்வெளியில் ஆபத்தான முறையில் பிணத்தை சுமந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது .மயான பாதையை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இது போன்ற அவலநிலை நிலவி வருகிறது. அக்கிராமத்தில் மயான பாதை ஆக்கிரமித்துள்ள தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கிராமத்திற்கு சொந்தமான மயான பாதையை மீட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வெள்ளைக்காரப்பட்டி கிராம மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.