• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடுத்த வருடம் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்…

Byமதி

Oct 17, 2021

பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உட்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இவர்கள், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், புதிய தலைவர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்க்கு பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உட்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இவர்கள், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், புதிய தலைவர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், அரசியல் நிலைமை, பணவீக்கம் மற்றும் கடுமையான விவசாய நெருக்கடி, விவசாயிகள் மீதான கொடூர தாக்குதல் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என்றும், நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தலைவராகும் படி, கட்சி நிருவாகம் கேட்டுக்கொண்டதாகவும், அதை ராகுல் பரிசீலனை செய்வதாக ராகுல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.