• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் விசிக கட்சியினர் சாலை மறியலில்

ByKalamegam Viswanathan

Apr 14, 2023

மதுரை விமான நிலைய சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வந்த விசிக கட்சியினரை மாற்றுபாதையில் செல்ல போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரை பெருங்குடி விமான நிலைய சாலையில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வந்து கொண்டிருந்தனர்.அப்போது அம்பேத்கர் சிலைக்கு செல்வதற்கு பெருங்குடி சாலையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலையை கடந்து செல்ல வேண்டும் என்பதால் காவல்துறையினர் விடுதலை சிறுத்தை கட்சியினரை தடுத்து நிறுத்தினர் .மேலும் அவர்களை மாற்று பாதையில் போக சொல்லி அறிவுறுத்தியதில். அவர்கள் அதை ஏற்க மறுத்து ஆண்கள் பெண்கள் என 100 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.