டிடிவி போல பல கட்சிகள் வெளியே சென்றுள்ளது அதுபோல அவர் சென்றால் எங்களுக்கு எதுவும் எதிர்ப்பு இல்லை அவர் யாரோ நாங்கள் யாரோ- திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி
அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலைய நுழைவாயிலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு.
ஊர் அறிந்த செய்தியை இன்றைக்கு அவர் வெளியிட்டுள்ளார் நாட்டு மக்கள் அறிந்த செய்தி தான் இது ஆனாலும் கூட இதை நிரூபிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது அந்த வகையில் பாஜக தலைவர் அதற்கான பணியினை செய்வார் என்று எதிர்பார்க்கிறோம் எங்களது கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அது குறித்த தகவல்களை சொல்லி இருக்கிறார்கள்.
இதுகுறித்து முழுமையான தகவல் எங்களுக்கு தெரியவில்லை முழுமையான தகவலை தெரிந்து கொண்டு எங்களது கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார்
ஊழல் பட்டியலை வைத்து திமுக மீது எந்த மாதிரியான நடவடிக்கை குறித்த கேள்விக்கு:
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு ஒருமுறை ஊழல் காரணத்துக்காக ஒரு முறை சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதற்காக மத்திய அரசு இரண்டு முறை திமுக அரசை கலைத்து இருக்கிறது அரசு மீண்டும் கலைக்கப்பட்டால் பெரிய ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் இன்றைக்கு இந்த சட்டத்து பிரிவை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்ற காரணத்தினால் காலம் தாழ்த்தி சொல்லுகிறார் என்று நான் நினைக்கிறேன்.
பல்வேறு சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதற்காகவே இந்தப் பட்டியல் நிரூபிக்கப்படும் வகையிலே பதவி விலகுவார் என்று நான் நம்புகிறேன்
குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்புக்கு வந்தாலே நிர்வாக சீர்கேடு பல்வேறு சட்ட ஒழுங்கு கெட்டுப் போகும் நிலை என்பதும் நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் சிறு தவறுதல் காரணமாக இன்றைக்கு ஆட்சி பொறுப்பு வந்துள்ளார்கள் திருமங்கலம் நிகழ்வு நாளும் சரி, திருச்சியில் நடந்திருக்க நிகழ்வு நாளுவாக இருந்தாலும் சரி அவர்களே காப்பாற்றுபவர்கள் என்ற நம்பிக்கையோடு செய்கின்ற தவறுகளால் தான் நாங்கள் கருதுகிறோம்.
திருமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழ் உள்ள சீர்கேடுகளை காட்டாக இருக்கிறது
ஐந்து குழந்தைகள் இருக்கும் தருவாயில் மரணம் என்பதோடு மட்டுமல்லாது மற்ற தமிழ்நாடு அளவில் ஒரு நிர்வாக சீர்கேடு இருப்பதாக தான் நாங்கள் கருதுகிறோம்.
நாளை எங்களது கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வருவாய்த்துறை அமைச்சரிடம் எல்லோரும் கொடுத்துள்ளோம் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு தீர்மானம் வருகின்ற போது நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
24 நடைபெறும் ஓபிஎஸ் தலைமையிலான பொதுக்கூட்டம் குறித்த கேள்விக்கு:
அவர்கள் நடத்துவது தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார். அதிமுகவும் அவருக்கும் இந்த சம்பந்தமும் இல்லை. இறுதி காலகட்டம் முடிந்து விட்டது நீதிமன்றத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் 24 ஆம் தேதி அவர் நடத்தப் போவது ஒரு கட்சி அளவிற்கு கூட உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள் தமிழ்நாடு முழுவதும் ஒரு இமேஜை உருவாக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள் அவர் தனி கட்சி ஆரம்பித்தால் எங்களுக்கு எதுவும் ஆச்சரியமில்லை. டிடிவி போல பல கட்சிகள் வெளியே சென்றுள்ளது அதுபோல அவர் சென்றால் எங்களுக்கு எதுவும் எதிர்ப்பு இல்லை அவர் யாரோ நாங்கள் யாரோ.
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்த கேள்விக்கு:
பெயர் வைப்பதில் எங்களைப் பொருத்தவரை நாங்கள் பேரறிஞர், எம்ஜிஆர், அண்ணா என்று தான் இருப்போம். மத்திய ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை வைக்க வேண்டும் என எடப்பாடி யாரின் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இறுதி கட்ட முடிவின்போது உங்கள் கழகப் பொதுச்செயலாளர் சொல்வார். விமான நிலைய சாலை 9 கோடி ரூபாய் மதிப்பில் எடப்பாடியாரின் ஆட்சியின் போது போடப்பட்டது.