• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிரொலி-புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது

ByA.Tamilselvan

Apr 13, 2023

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்ததன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாடுவோரை எச்சரிக்கும் வகையில் நிறுவனங்களே கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் விளையாடுவோரின் இருப்பிடத்தை கண்டறிந்து தடைவிதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புதிய கட்டுப்பாடுகளின்படி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட முயன்றால் எச்சரிக்கை தகவல் காட்டும். எச்சரிக்கையை மீறி ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுவோர் மீது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ரேடியோ அலைவரிசை, வைபை, இணையம் ஆகியவற்றின் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவது தடுக்கப்படும்.சட்டத்தை மீறி தமிழ்நாட்டில் விளையாட்டுகளை நடத்துவதை அனுமதிக்கப்போவதில்லை என்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.