• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கலாஷேத்ரா விவகாரம்- ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி

ByA.Tamilselvan

Apr 11, 2023

கலாஷேத்ரா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன், குமார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இன்று விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், மாணவ-மாணவியர்களுக்கு தற்போது தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்த பிறகு அடுத்த வாரம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.