• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மார்கழி திங்கள் முதல் பார்வையை வெளியிட்ட நடிகர் தனுஷ்

மனோஜ் பாரதிதான் இயக்கும் முதல் படத்திற்கு ‘மார்கழி திங்கள்’என பெயர் வைத்துள்ளார்
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். முதல் பார்வையை பொறுத்தவரை கிராமத்து கதைக்களத்தில் படம் உருவாக உள்ளதையும், காதல் கதையாக இருக்கும் எனவும் தெரிகிறது. பாரதிராஜா கையில் ஊன்றுகோலுடன் நின்றிருக்கும்படியான முதல் பார்வை கவனம் பெற்றுள்ளது.