• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

உதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 4வது நாளான நேற்று உபயதாரர் பராசக்தி மகளிர் வார வழிபாட்டு சங்கம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ ஆதிபராசக்தி அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்…


உதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டு சித்திரை தேர் திருவிழா அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.இதனையொட்டி கடந்த 18ம் தேதி பூச்செறிதல் விழாவுடன் திருத்தேர் விழா வெகு விமர்சையாக துவங்கியது. இதனை ஒட்டி அடுத்த மாதம் 18ம் தேதி வரை ஒவ்வொரு சமுதாய மக்களின் உபயம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டு திருத்தேர் விழாவில் 4வது உபயமாக பராசக்தி மகளிர் வார வழிபாட்டு சங்கம் சார்பாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ ஆதிபராசக்தி அலங்காரத்தில் மாரியம்மன் லோயர் பஜார், மெயின் பஜார், காபி ஹவுஸ் சதுக்கம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோவில் வரை நடைபெற்றது.இந்த திருத்தேர் வீதி உலாவில் செண்டை மேளங்கள் முழங்க மாரியம்மன் திருவிதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.