• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!

Byவிஷா

Mar 20, 2023

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் சுற்றிய நிகழ்ச்சி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்பப்பள்ளி ஆசான் கீழவழுத்தூர் தினேஷ் சுஷ்மிதா இவர்களின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் சிலம்ப பள்ளி மாணவ மாணவிகள் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றி மணமக்களை வரவேற்பு மேடைக்கு அழைத்து வந்தனர்.
மேலும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தவர்களை மகிழ்விக்க சிலம்பம், மான்கொம்பு, வேல் கம்பு, புலி ஆட்டம் போன்ற விளையாட்டுகளை மண்டபத்தில் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தனர். அப்போது சிலம்ப கலையை பாதுகாப்போம், சிலம்பக் கலையை வளர்ப்போம் என்று மணமக்கள் கூறி இருவரும் சேர்ந்து சிலம்பம் சுற்றி அனைவரையும் வரவேற்றனர். இது மணமக்கள் தினே{ம் சுஷ்மிதாவும் சிலம்பத்தின் மேல் கொண்டிருக்கும் பக்தியையும், கலை உணர்வையும் கொண்டுள்ள நீங்கள் பல்லாண்டு வாழ்க என அனைவரும் வாழ்த்தி பாராட்டினர்.
திருமண விழா நிகழ்வுகளில் தற்போது ஆட்டம் பாட்டம் ஆர்கெஸ்ட்ரா என்று திருமண வீட்டார்கள் பெரும் பொருட் செலவில் ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் மணமக்கள் சிலம்பக் கலையை மண்டபத்தில் நிகழ்த்தி காட்டியது புதுமையாக உள்ளதாகவும் பாராட்டி, மென்மேலும் இக்கலை வளர நிகழ்ச்சிகளில் இவ்வாறான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அங்கு கூடியிருந்த அனைவரிடமும் கேட்டுக் கொண்டனர்.