• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

செய்தி எதிரொலி – தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

ByKalamegam Viswanathan

Mar 15, 2023

குடோன் அருகே அடர்ந்த முள் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து முள் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு மாணவர் விடுதி அருகே பல அடுக்குமாடி குடியிருப்புகளும் மற்றும் சமையல் எரிவாயு குடேன் ஒன்றும் உள்ளது இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அடர்ந்த முள் பகுதியில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது இது மலமலவென எறிய தொடங்கியதும் இதை கண்ட அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீய அணைத்தனர் இதனால் கேஸ் குடோனுக்கு பரவ இருந்த தீயானது தவிர்க்கப்பட்டது இதனால் பெரும் அசம்பாவிதமும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது தீ விபத்து குறித்து மாடக்குளம் கிராம நிர்வாக அதிகாரிக்கு எஸ் எஸ் காலனி காவல் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் சம்பவ குறித்து நமது அரசியல் டுடே இணையதள செய்தியில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் அதன் எதிரொலியாக இடத்தின் உரிமையாளருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அடர்ந்த முள் மற்றும் அனைத்து ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர் ஜேசிபி மூலமாக முழுமையாக அகற்றினார்…