• Tue. Apr 16th, 2024

மதுரை மாநகராட்சி தினக்கூலி,ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டம்

ByKalamegam Viswanathan

Mar 15, 2023

இரண்டு மாதமாக சம்பளம் தராததை கண்டித்து மாநகராட்சி தினக்கூலி& ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மதுரை மாநகராட்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டல அலுவலகங்களின் கீழ் தினக்கூலி&ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்கள் என தினசரி 1000க்கும் மேற்பட்டோர் மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், மதுரை மண்டலம் 3க்கு உட்பட்ட 10 வார்டுகளை சேர்ந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு 2 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என, தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டும் இன்று காலை தூய்மை பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *