• Sat. Apr 1st, 2023

மண்டைக்காடு கோவில் திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் ,அதிகாரிகளுக்கு பாராட்டு

மண்டைக்காடு திருவிழாவின் போது போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பில் சிறப்பான சிறப்பான முறையில் பணிபுரிந்த காவலர்கள் ,அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 05-03-2023 முதல் 14-03-2023 வரை மண்டைக்காடு கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .D.N. ஹரி கிரன் பிரசாத் IPS தலைமையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு திருவிழா பாதுகாப்பான முறையில் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த மண்டைக்காடு திருவிழாவின் போது சிறப்பான முறையில் பணிபுரிந்து, போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய காவலர்களுக்கும், வேறு மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து பொதுமக்கள் பாதுகாப்பில் சிறப்பான முறையில் பணிபுரிந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது பாராட்டினை தெரிவித்தார்.
மேலும் சிறப்பாக பணிபுரிந்து ஏனைய காவலர்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் . ஈஸ்வரன் அவர்கள் மற்றும் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *