• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கள்ளிக்குடி வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி

ByA.Tamilselvan

Mar 8, 2023

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வின் ஒரு பகுதியாக கள்ளிக்குடி வட்டார வளமையத்தில்ஆசிரியர்களுக்கான பேச்சுபோட்டி நடைபெற்றது.
கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் வட்டார வளமையத்தில் புதிய எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கான பேச்சுபோட்டி நடைபெற்றது.இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியப் பெருமக்களுக்கு “சிகரம் தொட சிலேட்டை எடு”என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி வெகு விமரிசையாக வட்டார கல்வி அலுவலர்கள் திருமதி கோவிந்தம்மாள், திருமதி சாந்தி, வட்டார மேற்பார்வையாளர், திருமதி ரெனி டா, மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் ஒருங்கிணைப்பில் 08.03.2023(புதன்) இன்று ன்று பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் 18 ஆசிரியர்கள் கலந்து கொண்டு “சிகரம் தொட சிலேட்டை எடு”என்ற தலைப்பில் அற்புதமாக பேசினார்கள். கல்வியின் அவசியம், கல்வி கற்றவர்களின் பெருமைகளை இலக்கிய மேற்கோள், அப்துல்கலாமின் வாழ்க்கை போன்றவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளை கூறி பேசினார்கள்.இப்போட்டியில் நடுவர்களாகதிருமங்கலம் இலக்கியப்பேரவையின் செயலாளர் திரு.சு .சங்கரன், பழனிராஜ் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், இலக்கியப்பேரவை பொருளாளர் அ.தழிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் திருமதி M.வெங்கடேஸ்வரி(ஊ.ஒ.ந.பள்ளி லாலாபுரம்),முதல் பரிசு, P.பொன்னரசி (ஊ.ஒ.ந.பள்ளி அகத்தா பட்டி),இரண்டாம் பரிசு மற்றும் K. கீதா (கூடக்கோவில் நாடார் மேல்நிலைப் பள்ளி) மூன்றாவது பரிசு பெற்றனர். முதல்பரிசு 1000 இரண்டாம் பரிசு 750 மூன்றாம் பரிசு 500 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

மேலும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தன்னார்வலர்களை ஊக் குவிக்கும் வண்ணமாக இத்திட்டத்தின் கீழ் கள்ளிக்குடி ஒன்றியத்தில் செயல்படும் 33 மையங்களில் தன்னார்வலர்களுக்கு, SLOGAN WRITING போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் உவரி தன்னார்வலர் முத்து செல்வி முதலிடமும், ஓடைப்பட்டி தன்னார்வலர் சுஜாதா இரண்டாம் இடமும் பெற்றனர்.முதல் பரிசு ரூபாய் 1000 ,பரிசு ரூபாய் 750. வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது